Monday 30 July 2012

யாருக்கும் இரக்கமில்லை







கனவுகள் அதற்கும் இரக்கமில்லை 
அவர் ஊரில் இல்லை என்றபின்னும் நிதமும் ஓடி வந்துவிடுகிறதே!
கண்கள் அதற்கும் இரக்கமில்லை
அவர் போன வழியையே பார்த்துக்கொண்டு நிற்கிறதே! 
செவிகள் அதற்கும் இரக்கமில்லை 
போகிறேன் என்றவர் கூறியதைக் கேட்டபின்னும் இயங்கிக்கொண்டு இருக்கிறதே! 
இதழ்கள் அதற்கும் இரக்கமில்லை 
வேண்டாம் என்றிவள் கூறும்முன்பே ஊமையாய் உருக்குளைகிறதே!
இதயம் அதற்கும் இரக்கமில்லை 
இதோ வந்துவிட்டார் என்றெண்ணி ஏமாந்து துடிக்கிறதே!
இனியவனே உனக்கும் இரக்கமில்லை
இவள் படும் பாடனைத்தும் அறிந்திருந்தும் 
அழாதே என்று அங்கிருந்தே ஆறுதல் சொல்கிறாயே!

அன்பே ஆருயிரே


ழகுக்கிளியே!
சைமயிலே!
ன்னும் கொஞ்ச நேரம் இசைத்திடு குயிலே!
ரம் ஏற்றி வைத்தாய் என் நெஞ்சுக்குள்ளே!
யிரும் உருக வைத்தாய் உன் செவ்விதழ் மொழியாலே!
ர் உறவுகள் மறந்துபோகிறேன் உன் சொல்வனப்பின் சுவையினிலே!
ண்ணி எண்ணி ரசித்தேன் உன் நேசத்தை!
ன் இன்னும் கடத்துகிறாய் நேரத்தை!
ம்புலனும் தவிக்குதடி தாகத்தில்!
யிலாய் நீ வந்தால் ஒருங்கிணையும் உன் வார்த்தையில்!
டி வா உயிரே உயிர் நிறைக்க!
வை மொழிப்படி வாழ்வமைக்க!

Wednesday 11 July 2012

அவளும் அவள்சார்ந்த இடமும்






கோவில்களில்மட்டும்  நுகர்ந்து பழகியிருந்த 
புனிதவாசனை பரவிக்கிடந்தது அவள் அறையில்;
என்னவென்று சென்று பார்த்தேன் 
என் தேவதை உடைமாற்றியிருந்தாள்;

எழுதாமல் ஊடல் செய்துகொண்டிருந்த பேனாவிற்கு 
இதழ்சிகிச்சை செய்து எழுத வைக்கிறாள்;
இதைத்தான் எதிர்பார்த்தேனென்று அவள் 
கைவிரல்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறது;

ஜன்னல் கம்பிகளுக்குள் தகராறு 
அங்கேபாரேன் அழகியபூச்செடி என்றவளை
நேற்றிரவு சேகரித்த மழைத்துளிகளால் 
கன்னம் நனைத்து மகிழ்ந்திடத் துடிக்கிறது;

அழகனைத்தையும் அடைந்துவிட்ட மமதையில்
ஆட்டம் காட்டுகிறது உன் அறைப்படுக்கை
நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் 
என்று ஏங்கச் செய்து விடுகிறது!!

எவ்ளோநேரம் வா போகலாமென்கிறாய் 
என் சிதறிய இதயத்தை சேகரித்துக் கொண்டு 
ஒன்றுமறியா  உன் உயிர் நண்பனாய் வெளியே வர 
இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டுமடி எனக்கு..

Saturday 7 July 2012

நான் யார்?


அன்னையிடம் இருந்து பார்த்தேன் 
என்னை அன்பென்றார்கள்;
ஏடுகளில் புகுந்து பார்த்தேன் 
என்னை அறிவென்றார்கள்;
ஆசைகளின்பின் அலைந்து பார்த்தேன்
என்னை அரக்கனன்றார்கள்; 
அடுத்தவனுக்காக அடிவாங்கிப் பார்த்தேன்
என்னைத் தியாகமென்றார்கள்;
கோவிலுக்குள் குடி புகுந்து பார்த்தேன்
என்னைக் கடவுளென்றார்கள்; 
யாருக்கும் இன்னும் தெரியவில்லை
நான் 'எண்ணம்' என்று...

புன்னகை


குழந்தைப் பருவத்தில் - காண்போரைக் கவர்ந்திழுக்கும் 
மனோகரம்; 
பள்ளிப் பருவத்தில் - வெற்றிக் குறியீடுகளின் 
வீரப் பிதற்றல் ;
கல்லூரிப் பருவத்தில் - முதல் 
ஆசையின் முகவரி ; 
பின் இளம்பருவத்தில் - எல்லாம் 
சாதித்துவிட்ட ஆணவத்தின் நிழல்;
முன் மூப்புப்பருவத்தில் - சோகங்களை 
மறக்க முனையும் பகல்வேசம்;
பின்மூப்புப்பருவத்தில் - எல்லாம் கண்ட 
அனுபவத்தின் அடக்கம்.. 
மாறிக்கொண்டே இருக்கிறது
காலத்துக்கேற்ப - மனிதனுடன் சேர்ந்து..

Monday 2 July 2012

எது தடை?

 
கடும்தவம் புரிந்திருப்பேன் முற்பிறப்பில்
கயல்விழியாள் காதலியாய்க் கிடைத்துவிட்டாள் இப்பிறப்பில்;
பாவங்கள் பலவும் செய்திருப்பேன் முற்பிறப்பில் 
பாவையவள் கண்ணில் நீர்நிறைக்கிறாள் இப்பிறப்பில்;
முத்துக்கள் சிந்தும்முன் ஏந்திடத்துடிக்குது ஐம்பொறி 
முட்டுக்கட்டையாய் தடுப்பது உன்வீட்டார் ஜாதிவெறி;