Friday 30 March 2012

வேளை நல்ல வேளை



என் கடிகாரத்திற்குத் தான் உன் மீது
எத்தனை காதல்! கடைசியாய் உன்னைப் 
பார்த்த நிமிடங்களைக் கடந்து 
இயங்க மறுக்கிறது..  

கண்மணியே பேசு



ஆறேழு மொழிகள் தெரியுமென்ற 
ஆணவம் எல்லாம் அழிந்து விட்டது - உன்
மௌனத்தின் அழுத்தம் வெட்கமா
வெறும் உதாசினமா என்பது தெரியாததால்.... 

Wednesday 21 March 2012

உறக்கம்



இப்பொழுதெல்லாம் சீக்கிரமே தூங்கி விடுகிறேன்  -
என் கனவில் வருவதற்காக காத்திருக்கும் உன்னை 
நீண்ட நேரம் ஏமாற்ற வேண்டாம் என்று 

Tuesday 20 March 2012

மாலை மங்கும் நேரம்


என் தோட்டப் பூக்களுக்கெல்லாம் எப்படித் தெரியுமோ
நீ ஊரில் இல்லாதது  - அனைத்தும்
தலை கவிழ்ந்து நிற்கின்றன சோகத்தில்

திறப்பு விழா


பாழடைந்த கோவில் கூட சிவ ராத்திரி அன்று திறந்திருக்குமாமே!!
இன்றாவது உன் இதழ் திறந்து சொல்லி விடு நம் காதலை -
பாவம் சாமிக் குத்தம் ஆகி விடப் போகிறது..

மின்வெட்டு



காபி, டீ குடிப்பதில்லை - காலையில் பால் வாங்க வரிசையில் நிற்க வேண்டும் என்பதால்
மாத தவணை செலுத்தி பைக் ஒன்று வாங்கினேன் - பேருந்துக்குக்  காத்திருக்க வேண்டி இருப்பதால்
இருக்கும் வரை எதற்கும் காத்திருந்ததில்லை
இன்று இறந்த பின்  வரிசையில் காத்திருக்கிறேன் என் உடலை எரிப்பதற்காக
காரணம் எட்டு மணி நேர மின்வெட்டு.

நீயில்லாத நான்



உனைக்  காணும் போதெல்லாம்
பரவசம் அடைகிறேன்  - மறுநாள்  தாயகம் திரும்பப் போகும்
அகதியைப் போல...

லஞ்சம்



ஏ இதயமே !
என்ன வாங்கினாய் அவனிடம்??
எனக்குள் இருந்து கொண்டு -
அவனுக்காய் தினம் துடிப்பதற்காக!!!

ஓர வஞ்சனை



ஊனமுற்றவர் என்றால் நீ ஓடி  வந்து உதவுவாயே 
என்னிடம் மட்டும் ஏன் இந்த இறுக்கம்?
உன் விழிகள் இரண்டும் மோதிய விபத்தில்
இதயம் தொலைத்து நிற்பவன் நான் என்பதால்
நானும் ஊனமுற்றவனே ......
உதவு  மானே....
உயிர் கரையும் ஒற்றை சொல் சொல்லி .....