Sunday, 2 February 2014

சொல், ஒரு சொல்!....(3)

இன்றைய சொல்: "மூரல்"

மூரல் - புன்சிரிப்பு, பல், சோறு

மேற்கோள்கள்:

1. கம்பராமாயணம் - மூரல் முறுவலன் - இந்த இடத்தில் புன்சிரிப்பு எனும் பொருள்

சூர்ப்பணகை வதை படலத்தில், லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த பின், அவள் அலறல் கேட்டு இராமன் அந்த இடம் வருவான். என்ன நடந்தது என்று லட்சுமணனிடம் கேட்கும் பாடல் இது:

மூரல் முறுவலன், இளைய 
     மொய்ம் பினோன் முகம் நோக்கி, 
'வீர! விரைந்தனை, இவள்தன் 
     விடு காதும், கொடி மூக்கும், 
ஈர, நினைந்து இவள் இழைத்த 
     பிழை என்?' என்று இறை வினவ, 
சூர நெடுந்தகை அவனை 
     அடி வணங்கி, சொல்லுவான்.


​2. பன்னிரு திருமுறை - மூரல் எனச்சொல் வெண்மூத்த நகையார் - இந்த இடத்தில் பல் எனும் பொருள்​

வாரி சொரியுங் கதிர்முத்தும்
வயல்மென் கரும்பிற் படுமுத்தும்
வேரல் விளையுங் குளிர்முத்தும்
வேழ மருப்பின் ஒளிர்முத்தும்
மூரல் எனச்சொல் வெண்முத்த
நகையார் 

​​
தெரிந்து முறைகோக்குஞ்
சேரர் திருநாட் டூர்களின்முன்
சிறந்த மூதூர் செங்குன்றூர்.

​3. பெரும்பாணாற்றுப்படை 

பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்

இந்த இடத்தில் சோறு எனும் பொருள்

எயிறு என்றாலும் பல் எனும் பொருள் உண்டு.

"ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை இந்து இளம்பிறை போலும் எயிற்றினை- நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

No comments:

Post a Comment