கண்ணைக் கவரும் கண்ணாடிப் பெட்டிக்குள்
கவர்ச்சியாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது - 500 ரூபாய் மதிப்புள்ளது;
ஆடித் தள்ளுபடியின் இடிபாடுகளுக்குள்
சிக்கிச் சிதைந்து கொண்டிருந்தது - 100 ரூபாய் மதிப்புள்ளது;
இரண்டுக்கும் தெரியுமா?
கடையைத் தாண்டினால் அவை
நடக்கவிருப்பது - ஒரே அழுக்குப் பாதையில் தான் என்று!
No comments:
Post a Comment