அதீத அன்பு என்பது ஒரு பைத்தியக்கார மனநிலை.
சில பைத்தியங்கள் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சில பைத்தியங்கள் வெற்று கோபத்தையும் கனல் வார்த்தைகளையும் கண்ணில் கண்டவர்களுக்கெல்லாம் கடனளிக்கும்.
சில பைத்தியங்கள் தன்னைத் தானே வதைத்துக்கொண்டு வாழ்வில் நிறைவு பெறும்.
ஆனால் அந்த உலகத்தை சாதாரணன் ஒருவனால் புரிந்து கொள்ள முடியாது. அவை பைத்தியங்களுக்கு மட்டும் சொந்தமானவை.
பைத்தியங்களின் மொழி, பைத்தியங்கள் மட்டுமே அறிந்த ஒன்று.
அவைகளின் மகிழ்ச்சிக்கும், கோபத்துக்கும், அழுகைக்கும் காரணங்கள் தேவைப்படுவதில்லை. உணர்வுகள் மட்டுமே போதுமானதாக இருக்கின்றன.
அறிவு அழிந்து போகவில்லை இன்னும். ஆனால் மனதுக்கு முன், அது அமிழ்ந்து போய் விடுகிறது அந்தப் பைத்தியங்களுக்கு!
பைத்தியமாய் இருப்பது ஒரு கொடுப்பினை. பைத்தியமாக்கப்படுவதும் கூட!

No comments:
Post a Comment