கனவுகள் அதற்கும் இரக்கமில்லை
அவர் ஊரில் இல்லை என்றபின்னும் நிதமும் ஓடி வந்துவிடுகிறதே!
கண்கள் அதற்கும் இரக்கமில்லை
அவர் போன வழியையே பார்த்துக்கொண்டு நிற்கிறதே!
செவிகள் அதற்கும் இரக்கமில்லை
போகிறேன் என்றவர் கூறியதைக் கேட்டபின்னும் இயங்கிக்கொண்டு இருக்கிறதே!
இதழ்கள் அதற்கும் இரக்கமில்லை
வேண்டாம் என்றிவள் கூறும்முன்பே ஊமையாய் உருக்குளைகிறதே!
இதயம் அதற்கும் இரக்கமில்லை
இதோ வந்துவிட்டார் என்றெண்ணி ஏமாந்து துடிக்கிறதே!
இனியவனே உனக்கும் இரக்கமில்லை
இவள் படும் பாடனைத்தும் அறிந்திருந்தும்
அழாதே என்று அங்கிருந்தே ஆறுதல் சொல்கிறாயே!
Superb....
ReplyDeleteThank you..
ReplyDeletenice de
ReplyDelete