Thursday, 11 April 2013

அன்றொரு நாள் அதே நிலவில் - 4


'நிலா நிலா ஒடி வா! நில்லாமல் ஓடி வா!'

'ம்..அப்டித் தான். பாட்டி சொல்லிக் குடுத்தது மாதிரி படிச்சுட்டு இரு தேவிக்குட்டி.கீழ அரிசிக்காரர் சத்தம் கேக்குது. இதோ வந்துடுறேன்'

'நிலா நிலா ஓடி வா!'

அப்படிச் சொல்லித்தான் ராகுல் அம்மா அவனுக்குச் சாப்பாடு ஊட்டுவாங்களாம். 'உனக்கு என்ன பாட்டு படிப்பாங்க உங்க அம்மா?' - என்ற அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?

'ஆமா அம்மா எனக்கு என்ன பாட்டு படிப்பாங்க? பாட்டி வந்ததும் கேட்கணும்.

அப்புறம் செல்வியோட அப்பாவும், அம்மாவும், செல்வியும் இந்தப் பக்கமா பைக்குல போறாங்களே? எங்க போறாங்க? ஓ! எக்ஸிபிஷன்க்கா? பாவம் செல்வி.இன்னைக்குத் தான் கூட்டிட்டுப் போறாங்க! எங்க மம்மி நல்ல மம்மி, போன வாரமே கூட்டிட்டுப் போய்ட்டாங்க. டெட்டி பியர் வாங்கினோம். குல்ஃபி ஐஸ் சாப்பிட்டோம். ராட்டினமெல்லாம் சுத்தினோமே! அச்சோ இதை ஜானுட்ட சொல்ல மறந்துட்டேனே!  நாளைக்கு அந்த மீசைக்கார மிஸ் வர்றதுக்குள்ள அவட்ட சொல்லணும். அந்த மிஸ் பார்த்துருச்சுன்னா ஏன் பேசிட்டு இருக்கன்னு அடிக்கும். ஆனா ஏன் அப்பா நம்ம கூட எக்ஸிபிஷன் வரல? அவர் கூட தனியா கடைக்குப் போயிருக்கேன். அம்மா கூடத் தனியா எங்கெங்கயோ போயிருக்கேன். பாட்டி கூட, அம்மா கூட கோவிலுக்குப் போயிருக்கேன். சுதர் அங்கிள் கூட..இல்லையில்ல..அவர் டாடின்னு கூப்டனும்ன்னு சொல்லிருக்காரே? சுதர் டாடி கூட நிறைய இடம் போயிருக்கேன். போன சண்டே கூட, அம்மா, நான், சுதர் டாடி வெளிய போனோமே? அது ஏன்? அம்மாவும், அப்பாவும் நானும் செல்வி மாதிரி பைக்கில் போனதேயில்ல? நேத்தைக்கு ஜானு கூட போனாளே? இதையும் பாட்டிட்ட கேட்கணும்.

'அம்மா! தேவி எங்கம்மா? ராகுல் அப்பா  மெரினா பீச் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிருக்காரு. அப்டியே தேவியையும் கூட்டிட்டுப் போலாம்ன்னு நினைச்சோம். பாவம் வயசான காலத்துல உங்களப் போட்டுப் படுத்திட்ருக்கும் கன்னுக்குட்டி..எங்க அது?' - சம்பிரதாயமாய்க் கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பார்க்காது மாடி நோக்கி நடந்தாள், அடுத்த வீட்டு ராகுலம்மா. பெண் பிள்ளையென்றால் உயிராய் இருப்பாள். ராகுல் மேல் வைத்த பாசத்திற்கு இம்மியளவு குறையாமல் தேவி மேலும் வைத்திருந்தாள்.

ராகுல் கண்ணா! தேவிக்குட்டி ரெடியா? ரெடி..ஒன்..டூ..த்ரி..புர்ர்ர்ர்ர்.........

(தொடரும்)

4 comments:

  1. * சம்பிரதாயமாய்க் கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பார்க்காது மாடி நோக்கி நடந்தாள்,

    நல்ல வரி

    ReplyDelete
  2. இந்த பகுதியில் இருந்து கதையின் நடையை தொடர்வதில் எனக்கு சிறிய சிரமம் இருந்தது. maybe எனக்கு வாசிப்பில் அதிக அனுபவம் இல்லாதது காரணமாக இருக்காலம்.

    ReplyDelete
    Replies
    1. அதாவது ஸ்டாலின், இந்தக் கதையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கேரக்டரும் என்ன ஃபீல் பண்றாங்கன்னு எழுத முயற்சித்திருக்கிறேன். விரிவாக சொல்ல வேண்டுமென்றால், முதல் பகுதி, அருணாவின் மேல் சுதர்க்கு காதல் வரக் காரணம் அவள் பெண்ணியச் சிந்தனைகள், தைரியம் என்பது பற்றியது. அதனுடன் சுதரின் கேரக்டரும் வாசகனுக்குப் புரிவதற்காக ஆங்காங்கே உரையாடல்களில் மெனக்கெட்டிருக்கிறேன். 2-ஆம் பகுதி, இதே போல் அருணா பற்றியது. 3-ஆம் பகுதி பிரசாத் பற்றியது. 4-ஆம் பகுதி, தேவிப்பாப்பா எப்படி இருக்கிறாள் என்பது பற்றியது. அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வாழவில்லை. அப்பாவிற்கு இவள் மேல் தந்தைப்பாசம் காட்டும் மனமில்லை. ஆனால் வெறுக்கவும் இல்லை. சுதர் டாடி என்று அழைக்கச் சொல்கிறான், பிரியமாகவும் இருக்கிறான். அது ஏன் என்று இந்தக் குழந்தைக்குத் தெரியவில்லை. அம்மாவும் அப்பாவும் பிரிந்து வாழ்கிறார்கள் என்பது இன்னும் இதற்குத் தெரியவில்லை. கதையின் எல்லாப் பகுதியிலும் அந்தந்த கேரக்டர்கள் கொஞ்ச நேரம் அவர்களுக்குள்ளேயே பேசுவது போல் முயற்சித்துள்ளேன். இது தேவி அவளுக்குள் பேசிக் கொள்ளும் பகுதி.

      Delete


  3. முதலில் நான் என் நிலையை தெளிவு படுத்துகின்றேன். நான் தேர்ந்த வாசகனும் இல்லை regularம் கிடையாது.

    பஞ்சத்துக்கு வாசிப்பவன்.



    நான் இப்போது படிப்பது உங்களோடைய blog"ம் என்னுடைய அப்பாவோட ப்ளாக் மட்டும் தான்



    நான் இதை விமர்சனம் செய்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். அந்த அளவுக்கு நான் worth கிடையாது.



    மேற்கொண்டு என் கருத்துக்கள்..





    நான் புரிந்து கொள்கிறேன் இக்கதையின் பகுதிகளாக பிரிக்கபட்டிருப்பவை கதாபாத்திரத்தின் எண்ணங்கள் (partially between first person & third person (ie writer))



    இப்பகுதிகளில் குழந்தை தேவியின் பகுதி என் போன்ற tubelight'களுக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. முடிவும் அப்படியே.



    குழந்தை தேவி பகுதி:



    தேவியை பீச்க்கு கூட்டி செல்லும் பகுதி சற்று சிரமமாக உள்ளது. கூட்டி செல்லுவது யாரென்று சின்ன அறிமுகம் (பழைய பாணி தேவை இல்லை புரியும் அளவிற்கு இருப்பின் போதுமானது)



    இறுதி பகுதி (பார்ட் 5):



    உரையாடல்களும் தேவியின் எண்ண ஓட்டங்களும் கலந்து சிரமத்தை ஏற்படுத்துகின்றது. அதனை பிரித்தறிய சிரமம் உள்ளது



    எழுதும் முறையில் இரண்டு வகை (எனக்கு தெரிந்த வரை) இருப்பது ஓரளவு கேள்வி பட்டிருக்கிறேன்.



    1. தீவிர தமிழ் எழுத்துக்கள் எ.கா: சுரா



    2. ஜன ரஞ்சக எழுத்துக்கள் எ.கா சுஜாதா





    எனக்கு தெரிந்த வரை அதிக வாசக வட்டம் (தரம் பற்றி பேசவில்லை) உடையவர்கள் இரண்டாம் பகுதியை சேர்ந்தவர்கள்.



    உங்களுடைய வாசகனாக என்னோடைய வேண்டுகோள் உங்களுது எழுத்துக்கள் அணைத்து பகுதி மக்களையும் சேர வேண்டும் என்பதையே என் விருப்பம்



    இரண்டாம் வகை எழுத்துகளிலும் புது ஸ்டைலை கொண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள் (சுஜாதா).



    No Offence"ங்க ..



    ReplyDelete