பெருமைக்காக சேர்த்து விட்டேன் பெரிய கல்லூரியில்;
பெட்டி பெட்டியைப் பணம் கொடுத்தேன் -
பெற்ற மகள் பெயர் எடுக்க;
படித்து முடிந்த கையுடன்
பட்டணம் தான் சென்று விட்டாள்;
மாதம் ஒன்று முடிந்து விட்டதால்
மணி ஆர்டர் வருமானக் காத்திருந்தேன்;
வந்ததென்னவோ தந்தி மட்டும் தான்;
என்னவோ ஏதோ என்று பதறிப்போய்
படிக்கச் சொன்னேன் பக்கத்துக்கு வீட்டு வாத்தியாரை;
அன்பு தான் பெரிதென்று உன் மனம்
விரும்பியவனை மணம் செய்து கொண்டதாய் அறிந்து கொண்டேன்.
அது அன்பென்றால் நான் வைத்தது என்ன மகளே??
No comments:
Post a Comment